நாடு முழுவதும் பத்தொன்பது குப்பை மலைகள் உருவாகியுள்ளன !

நாடு முழுவதும் பத்தொன்பது குப்பை மலைகள் உருவாகியுள்ளதாக உள்ளூராட்சி அமைச்சர் ஜானக வக்கம்புர இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட சபை உறுப்பினர் சமிந்த விஜேசிறி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நான்கு குப்பை மலைகள் காடுகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளதாகவும் குப்பை மலைகளால் சுற்றுச்சூழல் பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், தற்போது உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் ஒன்பது உரம் தயாரிக்கும்நிலையங்கள் இயங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
Published from Blogger Prime Android App