"கற்பக விநாயகர்" அறநெறிப்பாடசாலையில் இடம் பெற்ற சிறுவர் தினம் மற்றும் வாணி விழா.

பதுளை மாவட்டம் 2ஆம் பிரிவு,ரொசட் , ஹாலி எல தோட்டத்தில் லண்டன் வோள் தஸ்ரோ கற்பகவிநாயகர் ஆலயத்தினால் " கற்பக விநாயகர்" அறநெறிப்பாடசாலையில் நேற்று (08-10-2022)  சிறுவர் தின நிகழ்வும், வாணி விழாவும் சிறப்பான முறையில் இடம் பெற்றன.

இந் நிகழ்வில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் வைபவம் இடம் பெற்றன.

நிகழ்வானது இலங்கைக்கான அகிலன் பவுண்டேசன் முகாமையாளர் வி.ஆர். மகேந்திரன்  தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் கற்பக விநாயகர் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் 2ம் பிரிவு ஹாலி எல தோட்ட முகாமையாளர் ,கிராம உத்தியோகஸ்தர் ,கிராமத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

.