பகிடிவதையால் கல்வியை கைவிட்ட மாணவர்கள் !

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இடம்பெறும் பகிடிவதை காரணமாக 2000ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 169 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளனர் என கலைப்பீடத்தின் பீடாதிபதி கலாநிதி பிரபாத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த பகிடிவதை சம்பவம் காரணமாக வருடாந்தம் 15- 16 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியை இடைநிறுத்துகின்றனர். இது அந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு துயரத்தை ஏற்படுத்துவதாக அமைகின்றது என்றார்.

இவ்வாறு கல்வியை இடைநிறுத்தி விட்டுச் சென்ற மாணவர்கள் எழுதிய கடிதங்கள் எம்மிடம் உள்ளன. சிலர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். அண்மையில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவர் கூட முதலாம் வருடத்தில் அதிகமாக பகிடிவதைக்கு உள்ளானவர் என தெரிவித்தார்.
Published from Blogger Prime Android App