நீர்ப்பாசன அமைச்சினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி !

நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள சில விடயதானங்களை நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சருக்கு கையளிக்கும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அபிவிருத்தி செயற்பாடுகள், நீர்ப்பாசனத் திணைக்களத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் பணிகள் என்பன இராஜாங்க அமைச்சருக்கு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published from Blogger Prime Android App