நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை தவிர வேறு வழியில்லை : மத்திய வங்கி ஆளுநர்

நாடு தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை தவிர வேறு வழியில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வரி திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்புடன் இணைந்த பிற சீர்திருத்தங்கள் என்பன நிதியுதவி உறுதிப்படுத்தல் செயல்முறையின் பகுதிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்கவுடனான நேர்காணலின் போதே, ஆளுநர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

80 வீத மறைமுக வரி மற்றும் 20 வீத நேரடி வரி முறையே 60 வீதம் மற்றும் 40 வீதமாக மாற்றப்பட வேண்டும்.

குறைந்த வருமானம் பெறும் குழுக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு வரி முறையை தொடரவேண்டும் என

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
Published from Blogger Prime Android App