சரணடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த எச்சரிக்கையுடன் விடுவிப்பு !

நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்து நீதிமன்றில் முன்னிலையான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த எச்சரிக்கை விடுத்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

நீதித்துறையை குறிவைத்து அண்மையில் வெளியிட்ட அவமதிப்புக் கருத்து தொடர்பில் சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளுக்காக நீதிமன்றில் முன்னிலையாகாத, சனத் நிஷாந்தவை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், சட்டத்தரணிகளின் ஊடாக சனத் நிஷாந்த, நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியிருந்தார்.

இதையடுத்து, நாளாந்தம் தனிப்பட்ட ரீதியில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து சனத் நிஷாந்த விடுவிக்கப்பட்டுள்ளார்

Published from Blogger Prime Android App