இலங்கைக்கு ஆதரவளிக்க அர்ப்பணிப்புடன் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவிப்பு !

இலங்கைக்கு ஆதரவளிக்க அர்ப்பணிப்புடன் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் (Peter Breuer) மற்றும் இலங்கைக்கான தூதுவர் மசாஹிரோ நோசகி (Masahiro Nozaki) ஆகியோர் பிரத்தியேகமாக தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியின் தாக்கம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ஏழைகள் மற்றும் நலிவடைந்தவர்கள் மீது ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் உறுதிபூண்டுள்ளதாக அவர்கள் இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.
Published from Blogger Prime Android App