சட்டவிரோத மதுவை உடனடியாக கண்டறிய QR பொறிமுறை !

சந்தையில் சட்டவிரோத மதுபான போத்தல்களை உடனடியாக இனங்காண்பதற்காக கலால் திணைக்களம் கணினி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. மதுபான போத்தலில் ஒட்டப்பட்டுள்ள பாதுகாப்பு ஸ்டிக்கரில் உள்ள கியூஆர் குறியீட்டை சம்பந்தப்பட்ட கணினி செயலியைக் கொண்டு ஸ்மார்ட்போன் மூலம் ஸ்கேன் செய்ய முடியும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தச் செயலியின் மூலம் தேவையான தகவல்களைப் பெற முடியாமல் அது நிராகரிக்கப்பட்டால், அப் மூலம் முறைப்பாடு அளிக்கலாம் என்றும், சட்டம் உடனடியாக அமுல்படுத்தப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

‘EXCISE TAX STAMP VALIDATOR’ எனப் பெயரிடப்பட்ட இந்த அப்ளிகேஷனை அனைத்து அண்ட்ராய்ட் தொலைபேசிகள் மற்றும் அப்பிள் தொலைபேசிகள் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். இன்று (01) முதல் வாடிக்கையாளர்கள் உரிய அப் ஐ கைத்தொலைபேசியில் பதிவிறக்கம் செய்து அதன் ஊடாக தேவையான சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என கலால் திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.

Published from Blogger Prime Android App