விவசாயம் மற்றும் மீன்பிடித்துறைக்கு 10.6 மில்லியன் எரிபொருளை வழங்க சீனா இணக்கம் !

விவசாயம் மற்றும் மீன்பிடித்துறைக்கு 10.6 மில்லியன் லிட்டர் எரிபொருளை வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

இதில் 7.5 மில்லியன் லிட்டர் விவசாய தேவைகளுக்காக வழங்கப்படவுள்ளது. இந்த எரிபொருள் இருப்புக்கள் டிசம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இருப்புக்களை அறுவடைக்கு முன்னதாக வழங்க முடியாத போதிலும் அறுவடையின்போது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள இந்த எரிபொருள் இருப்பு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க சீனாவினால் வழங்கப்படவுள்ளது.
Published from Blogger Prime Android App