வவுனியாவில் பேரூந்து விபத்து -மூவர் உயிரிழப்பு 16 பேர் காயம்

வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) அதிகாலை 12.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பேரூந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு கவிழ்ந்துள்ளது.

இதன்போது பேரூந்து சாரதியும் மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை குறித்த பேரூந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்த நிலையில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து ஏற்பட்ட சமயம் அதே திசையில் பயணித்துக்கொண்ட மற்றுமொரு சொகுசு பேரூந்து சாரதி தனது பேரூந்தை விபத்து ஏற்பட்டதை தவிர்க்கும் முகமாக வீதியின் ஒரமாக செலுத்தி மற்றுமொரு பேரூந்து விபத்தை தவிர்த்திருந்தார்.

மேலும் இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.Published from Blogger Prime Android App