2023 வரவு செலவுத் திட்ட உரையில் 500 பாடசாலை மாணவர்கள் பங்கேற்பு !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நேற்று பாராளுமன்றத்தில் நிகழ்த்திய நிலையில் அதனை காண இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 500 பேர் கலந்துகொண்டதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற வரலாற்றில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு வரவு செலவுத் திட்ட உரையை அவதானிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.

மேல் மாகாணத்தில் உள்ள பல பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட சிரேஷ்ட மாணவர்களும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏறக்குறைய 100 நபர்களும் அதில் கலந்துக்கொண்டனர்.

மேலும், தேசிய இளைஞர் படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்களும் வரவு செலவுத் திட்டத்தைக் காண வந்திருந்தனர். வரவு செலவுத் திட்ட உரையை தொடர்ந்து அவர்கள் பாராளுமன்ற சுற்றுப்பயணத்திலும் ஈடுபட்டனர்.Published from Blogger Prime Android App