2026 ஆம் ஆண்டை நெருக்கடிக்கு முந்தைய வளர்ச்சி நிலைக்கு கொண்டு செல்லும் நோக்குடன் அரசாங்கம் செயற்படுகின்றது : செகான் சேமசிங்க !

2026 ஆம் ஆண்டை நெருக்கடிக்கு முந்தைய வளர்ச்சி நிலைக்கு கொண்டு செல்லும் நோக்குடன் அரசாங்கம் செயற்படுவதாக இராஜாங்க அமைச்சர் செகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர்ஸ் நெக்ஸ்ட் மாநாட்டில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நேர்காணலின் போது இராஜாங்க அமைச்சர் செகான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

1948 இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது.

இதற்கு தவறான பொருளாதார கொள்கை மற்றும் சுற்றுலாத்துறையை முற்றாக செயலிழக்க செய்த கொரோன தொற்று என்பன காரணமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.Published from Blogger Prime Android App