335 பயணிகளுடன் இலங்கை வந்த அஸூர் ஏர் விமானம் !

இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ள ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் விமான சேவையான சார்ட்டர் ஏர்லைன் "அஸூர் ஏர்" சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. 335 பயணிகளுடன் குறித்த விமானம் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், நாளை (04) முதல் இலங்கைக்கான விமான சேவைகளை பிரான்ஸ் கொடி ஏற்றிச் செல்லும் ஏர் பிரான்ஸ் நிறுவனம் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சுவிஸ் தேசிய விமான சேவையும் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் இலங்கையில் விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Published from Blogger Prime Android App