புகை விஷமானதில் 54 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி !

ஆரம்பப் பிரிவுக்கு அண்மையிலுள்ள வீடொன்றின் குப்பை எரித்ததில் அதிலிருந்து கிளம்பிய புகை விஷமானதில் அதனை சுவாசித்த அந்தப் பாடசாலையின் மாணவர்கள் 54 ​பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாணந்துறையில் உள்ள பிரதான ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

வயர்கள், அடங்கிய குப்பையை எரித்தமையால் விஷம் கலந்த புகை கிளம்பியுள்ளது என அறியமுடிகின்றது. இன்னும் சிலர், அம்புலன்ஸ் வண்டிகளின் ஊடாக வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

விடயத்தை கேள்வியுற்று பாடசாலைக்கு விரைந்த பெற்றோர்கள் சிலர், தங்களுடைய பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர் என்றும் அறியமுடிகின்றது.Published from Blogger Prime Android App