அடுத்த வருடத்திற்கு தேவையான பாடசாலை சீருடைகளில் 70 வீதமான சீருடைகள் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன !

சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் பாடசாலை சீருடையின் முதல் தொகுதியை அடுத்த மாதம் இலங்கை பெற்றுக்கொள்ளும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடத்திற்கு தேவையான சீருடைகளில் 70 வீதமான சீருடைகள் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன.

இதற்கு தேவையான விபரக்குறிப்புகள் ஏற்கனவே சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதன்படி, தயாரிக்கப்பட்ட சீருடைகளின் முதல் பகுதி அடுத்த மாதம் இலங்கைக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். Published from Blogger Prime Android App