75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு சில விசேட வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் தீர்மானம் !

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு சில விசேட வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, சுதந்திர தினமான அடுத்த வருடம் பெப்ரவரி 04 ஆம் திகதி தேசிய பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை இலவசமாக பார்வையிட பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இந்த விசேட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெறவுள்ள 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பொதுமக்கள் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பை வழங்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை 50 வீதத்தால் குறைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.Published from Blogger Prime Android App