இன்றும் மழை தொடர்ந்து அதிகரிக்கும் வாய்ப்பு !

இலங்கையின் தென்கிழக்கு திசையில் காணப்படும் வளிமண்டல குழப்பநிலை குறைந்த தாழமுக்க வலயமாக மாற்றமடைந்துள்ளது.

இதனால் நாட்டின் பல பிரதேசங்களில் பெய்யும் மழையானது இன்றும் தொடர்ந்து அதிகரிக்கும் வாய்ப்பு நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், கிழக்கு, சப்ரகமுவ, வடக்கு, வட மத்திய, தென் மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.Published from Blogger Prime Android App