புதிய பொருளாதார சித்தாந்தத்தை உருவாக்குவதற்கான புதிய பயணத்தை உருவாக்க வேண்டும் : ஜனாதிபதி !

புதிய பொருளாதார சித்தாந்தத்தை உருவாக்குவதற்கான புதிய பயணத்தை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். 52 அரச நிறுவனங்களினால் வருடாந்தம் 86 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுகின்றது எனவும் பிரபலமான தீர்மானங்களை விட நாட்டிற்கு சாதகமான தீர்மானங்களே இன்று அவசியமாகின்றன என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

இந்தியா மற்றும் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதியும் இலங்கையின் 23 ஆவது நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க இன்று திங்கட்கிழமை (14) பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார்.

2.9 பில்லியன் நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் விதித்த நிபந்தனைகளுக்கு இணங்க தொகையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Published from Blogger Prime Android App