கடன் தவணை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரிடம் முறைப்பாடு !

மத்திய வங்கியின் கடன் வட்டி வீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்த காரணத்தால், கடன் பெற்றவர்கள் கட்டுப்படியாக முடியாத அளவுக்கு கடன் தவணைகள் அதிகரித்துள்ளதாக சமூக சக்தி மக்கள் அமைப்பின் அழைப்பாளர் சட்டத்தரணி சுதேஷ் பிரசன்ன ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதனால் சில கடனாளிகள் தமது உயிரையும் இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி சுதேஷ் பிரசன்ன ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். கடன் கொடுத்தவர்களுக்கு நிவாரணத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பான மகஜர் ஒன்றையும் அவர் மத்திய வங்கி ஆளுநரிடம் அவர் கையளித்துள்ளார்.Published from Blogger Prime Android App