எரிபொருள் விலை திருத்த முறையில் மாற்றம் இல்லை : எரிசக்தி அமைச்சு !

விலை சூத்திரத்தின்படி எரிபொருள் விலை திருத்த முறையில் மாற்றம் இல்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப விலை திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதால், எரிபொருள் விலை சூத்திரம் தொடர்ந்தும் செயல்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் 1 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுவதுடன், இது நியாயமானதல்ல என பெற்றோல் நிலைய உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.Published from Blogger Prime Android App