விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு பிரித்தானியா அரசாங்கம் உதவி !

கிரிக்கெட் தவிர ஏனைய விளையாட்டுகளுக்கு தேவையான அறிவு, பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் புரிதலை வழங்க பிரித்தானிய அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (14) சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்பட வேண்டும் எனவும் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.Published from Blogger Prime Android App