பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் தொடர்பான காரியாலயத்தை ஸ்தாபிப்பதற்கான பேச்சுவார்த்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் வெள்ளிக்கிழமை (25) பாராளுமன்ற கட்டத்தொகுதியில் இடம்பெற்றது.
வரவு செலவுத் திட்டம் தொடர்பான காரியாலயத்தை ஸ்தாபிக்கும் சட்டமூலம் தொடர்பில் ஏதேனும் திருத்தம் காணப்படுமாயின் அதனை தெரிவு குழு கூடும் சந்தர்ப்பத்தில் முன்வைக்குமாறு கூட்டத்தில் கலந்துக் கொண்ட உறுப்பினர்களுக்குஅறிவுறுத்தப்பட்டது.
பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் தொடர்பான காரியாலயம் ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆற்றிய 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான உரையில் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
