ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மின்சாரக் கட்டணம் மீள்திருத்தம் செய்யப்படும் : காஞ்சன விஜேசேகர !

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நாட்டு மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) தினசரி மின்வெட்டுகள் தொடர்பான தகவல்களை தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெப்ரவரி மாதம் முதல் இலங்கை மக்கள் தினசரி மின்வெட்டுகளை அனுபவித்து வருகின்றனர் அது ஒரு கட்டத்தில் மின்வெட்டு 13 மணி நேரமாக நீடித்தது, இப்போது ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரமாக குறைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்

எவ்வாறாயினும் மின்சாரக் கட்டணத்தை திருத்தியமைக்காமல் அதனைச் செய்ய முடியாது என சுட்டிக்காட்டிய அவர் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மின்சாரக் கட்டணத்தை மீள்திருத்தம் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
Published from Blogger Prime Android App