மஹிந்த தேசப்பிரிய தலைமையில் தேசிய குழு நியமனம் !

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பிரதமர் தினேஸ் குணவர்தன உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகளை நிர்ணயத்திற்கான தேசிய குழுவொன்றை நியமித்துள்ளார்.

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவின் பணிகள் நவம்பர் மாதம் முதல் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை இடம்பெறும்.Published from Blogger Prime Android App