பால் மா கொள்கலன்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையொன்றை அவர் இன்று (29) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
பால் மாவை இறக்குமதி செய்கிறோம் என்ற போர்வையில் இறக்குமதியாளர்கள் மூலப்பொருட்களை இறக்குமதி செய்துள்ளதாக உரிய அறிக்கையில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த பிரச்சினை காரணமாக இந்த நாட்டில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
