தனுஷ்கவிற்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

தனுஷ்க குணதிலக்கவின் இரண்டாவது பிணைக் கோரிக்கை இன்று (17) சிட்னியில் உள்ள டவுனிங் சென்ட்ரல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே அவருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனுஷ்க குணதிலக்க தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிட்னி யுவதி ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து அண்மையில் கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலவை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிட்னி நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published from Blogger Prime Android App