விளையாட்டு வீரர்களின் நடத்தை தொடர்பில் பல முறைப்பாடுகள் பதிவு : விளையாட்டுத்துறை அமைச்சு !

விளையாட்டு வீரர்களின் நடத்தை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

பாலியல் குற்றச்சாட்டில் தனிஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டதன் பின்னர், இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உள்ளக விசாரணை நடத்துமாறு ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.Published from Blogger Prime Android App