தமக்கு பிரதமர் பதவிவேண்டும் என்று ராஜபக்சர்களிடம் மலர்த் தட்டை ஏந்திச்செல்லவில்லை : சஜித் பிரேமதாச !

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு தாம் அனுப்பிய கடிதம், தாம் தனிப்பட்ட ரீதியில் அனுப்பிய கடிதம் அல்ல என்றும், தமது பாராளுமன்றக்குழுவின் அனைவரும் இணைந்து அனுப்பிய கடிதம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

பாராளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று மன்றில் சமர்ப்பித்த கடிதம் தொடர்பிலேயே இந்த கருத்தை வெளியிட்டார்.

தமது கடிதத்தில் தேர்தல் உட்பட்ட 5 விடயங்கள் தொடர்பில் வலியுறுத்தல்களை விடுத்திருந்ததாகவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.

இதனை விடுத்து, தமக்கு பிரதமர் பதவிவேண்டும் என்று ராஜபக்சர்களிடம் மலர்த் தட்டை ஏந்திச்செல்லவில்லை என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.Published from Blogger Prime Android App