வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த துமிந்தவிற்கு எதிராக நடவடிக்கை : மைத்திரிபால சிறிசேன !

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க கட்சியின் மத்திய குழு எடுத்த தீர்மானம் தமக்கும் பொருத்தும் என்றும் தானும் மத்திய குழுவில் பங்குபற்றியதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் கட்சியின் ஆட்சியை பிடிப்பாரா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திரு மைத்திரிபால சிறிசேன, அது தொடர்பில் அச்சம் இல்லை எவரும் கட்சியில் இணையலாம் என தெரிவித்தார்.Published from Blogger Prime Android App