வளிமண்டல தளம்பல் நிலை தொடரும் : வளிமண்டலவியல் திணைக்களம் !

இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையிலும், காலை வேளையில் வடக்கு, மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது.

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Published from Blogger Prime Android App