இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிப்பதாக உலக வங்கியின் தலைவர் தெரிவிப்பு !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாட்டில் உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மல்பாஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் போது, இலங்கையின் சவாலான மெக்ரோ-பொருளாதார மற்றும் சமூக நிலைமை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் மற்றும் நிலையான தனியார் துறை தலைமையிலான வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்குவதற்கும் உலக வங்கி குழுவின் ஆதரவை மல்பாஸ் உறுதிப்படுத்தினார்.Published from Blogger Prime Android App