உரங்களை தடை செய்யும் முட்டாள்தனமான முடிவால் தேயிலை கைத்தொழில் பெருமளவில் பாதிப்பு : அமைச்சர் ரமேஷ் பத்திரன !

உரங்களை தடை செய்யும் முட்டாள்தனமான முடிவால் தேயிலை கைத்தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தான் ஒப்புக்கொள்வதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார். ஆனால் அமைச்சரவையின் ஒற்றுமை உடைந்து விடும் என்பதால் தான் இது வரை அதை பகிரங்கமாக கூறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேயிலை தொழில் பிரச்சினைகள் தொடர்பில் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Published from Blogger Prime Android App