அடுத்த வருடம் முதல் அனைத்து அரசாங்க கொடுப்பனவுகளும் ஒன்லைன் மூலம் செலுத்தப்படும் : ஜனாதிபதி !

அனைத்து அரசாங்க கொடுப்பனவுகளும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் இணையத்தளத்தில் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

01.03.2024 முதல் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கத்தின் அனைத்து கொடுப்பனவுகளுக்கும் மின்னணு முறையில் (ஒன்லைன்) வழங்குவதை கட்டாயமாக்க நான் முன்மொழிகிறேன், அந்தந்த பெறுநர்களுக்கான பண மானியங்கள் மற்றும் பொதுமக்களால் பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் சேவைகளைப் பெறுவதற்கான கொடுப்பனவுகள் உட்பட அனைத்தும் அடங்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை பாராளுமன்றத்தில் நிகழ்த்திய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
“அதன்படி, அனைத்து அரச நிறுவனங்களும் அந்தச் சேவைகளுக்கான ஒன்லைன் கட்டணங்களைச்

செயற்படுத்தும் திட்டத்தைத் தயாரிக்கவும், தேவையான சட்ட மாற்றங்களை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக, தற்போது அமைச்சுக்கள் மற்றும் துறைகளில் பணிபுரியும் தகவல் தொழில்நுட்ப சேவை அதிகாரிகளிடம் தேவையான உதவியை நாட வேண்டும்,” எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2023 வரவு செலவுத் திட்டத்தில் இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், 2023 ஆம் ஆண்டில் தரவு பாதுகாப்பு அதிகார சபையை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

“நாம் நமது டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துகையில், டிஜிட்டல் மயமாக்கலின் எதிர்மறையான தாக்கத்திலிருந்து நமது குடிமக்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக தனிப்பட்ட தரவுகளின் செயலாக்கத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

புதிய கட்டுப்பாட்டாளர் சுயாதீனமானது மற்றும் தனிப்பட்ட தரவுகளின் முறையான நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக இலங்கை மத்திய வங்கி, பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு, TRCSL மற்றும் தொடர்புடைய அனைத்து துறைசார் கட்டுப்பாட்டாளர்களுடன் ஈடுபடும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.Published from Blogger Prime Android App