நான்கு நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி !

நான்கு அமைச்சுக்களின் செயலாளர்கள், நிறுவனத்தின் தலைவர் மற்றும் தூதுவர் ஒருவரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் அண்மையில் (22) அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.


இதற்கமைய ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான புதிய இலங்கைத் தூதுவராக உதய இந்திர ரத்னவை நியமிப்பதற்கு உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன், சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாளராக சூலானந்த பெரேராவை நியமிப்பதற்கும், வெளிநாட்டு அமைச்சின் செயலாளராக அருணி விஜேவர்தனவை நியமிப்பதற்கும், கைத்தொழில் அமைச்சின் செயலாளராக ஜே.எம்.டி.ஜெயசுந்தரவை நியமிப்பதற்கும், தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராகப் பேராசிரியர் என்.டி.குணவர்தனவை நியமிப்பதற்கும் இதில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இலங்கை வங்கியின் தலைவராக காஞ்சன ரத்வத்தவை நியமிக்கவும் உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.Published from Blogger Prime Android App