மக்களுக்காக உழைக்க எதிர்க்கட்சிகளை ஒன்றிணையுமாறு பிரதமர் கோரிக்கை !

அரசியலில் வெறுப்பு கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களுக்காக உழைக்க ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சிகளை பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப் கென்னடியை மேற்கோள் காட்டி, நாடு தங்களுக்கு என்ன செய்திருக்கிறது என்பதை விடுத்து நாட்டிற்கு என்ன செய்ய முடியும் என எதிர்க்கட்சிகள் தங்களையே கேள்வி கேட்க ஆரம்பிக்க வேண்டும் எனவும் பிரதமர் இதன் போது தெரிவித்துள்ளார்.

மக்களின் இன்னல்களைப் போக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர், அவற்றை நாசப்படுத்த வேண்டாம் என எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.Published from Blogger Prime Android App