கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை இலங்கை ஒத்திவைத்துள்ளது !

கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை இலங்கை ஒத்திவைத்துள்ளதாக, சர்வதேச ஊடகமான ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு கடன்வழங்கியவர்கள் முன்வைத்துள்ள கேள்விகள் சந்தேகங்களிற்கு மத்திய வங்கியும் திறைசேரி அதிகாரிகளும் பதிலளிப்பதற்கான கால அவகாசத்தை வழங்குவதற்காக இன்று இடம்பெறவிருந்த கடன் பேச்சுவார்த்தைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 மில்லியன் டொலர் நிதி உதவியை பெறுவதற்கான இணக்கப்பாட்டினை எட்டிய பின்னர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை இலங்கை செப்டம்பரில் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.Published from Blogger Prime Android App