இலங்கையின் கடன் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படுகின்றோம் - சீனா !

இலங்கையின் கடன் நெருக்கடியை குறைப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கைக்கு கடன் வழங்கிய ஏனைய நாடுகளுடன் இணைந்து சீனா முன்னெடுத்துள்ளது என இலங்கைக்கான சீன தூதுரகத்தின் பொருளாதார வர்த்தக அதிகாரி லீ குவாங்ஜூன் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடன் நெருக்கடியிலிருந்து விடுபட்டு பேண்தகு பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு உதவுவதற்காக சீனா ஏனைய தொடர்புபட்ட நாடுகள் மற்றும் நிதியமைப்புகளுடன் இணைந்து செயற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

சீன இலங்கை வர்த்தக பேரவையின் 21 வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த தசாப்தங்களில் இரு தரப்பு உறவுகள் சுமூகமானதாகவும் நட்புமிகுந்ததாகவும் காணப்பட்டதால் இரு நாடுகளிற்கும் இடையி;லான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை அடைவதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது எனவும் சீன தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

2021 இல் சீனா இலங்கையின் இரண்டாவது பெரிய வர்த்தக சகாவாக காணப்பட்டது இலங்கைக்கு அதிகளவு வெளிநாட்டு முதலீடு சீனாவிடமிருந்தே கிடைத்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று சர்வதேச பொருளாதாரத்தில் வீழ்ச்சி போன்றவற்றின் மத்தியிலும் எங்கள் இரு நாடுகள் மத்தியிலான பொருளாதார உறவு வளர்ச்சியடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.Published from Blogger Prime Android App