அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பம் – பெருமளவான மக்கள் பங்கேற்பு!

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் கொழும்பில் மருதானை சுற்றுவட்டப் பகுதியில் தற்போது ஆரம்பமாகியுள்ளது .இந்தப் போராட்டத்தில் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டுள்ளனர். அத்தோடு, பொது மக்களும் பெருமளவிலானோர் தற்போது அங்கு விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் காலி முகத்திடல் போராட்டக் குழுவின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்பாகவோ அல்லது அருகாமையிலோ இன்று போராட்டம் நடத்த அனுமதிக்கப்படமாட்டாது என பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
Published from Blogger Prime Android App