கற்பக விநாயகர் அறநெறிப் பாடசாலையில்"சிறுவர் தினம் மற்றும் கலைநிகழ்வு
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்க்குட்பட்ட
வெல்லாவெளி விவேகானந்தபுரம்  கிராமத்தில் "வோழ்தஸ்ரோ சிறி கற்பக விநாயகர்ஆலயம்" லண்டன்(Uk) அனுசரனையுடன்  அமைக்கப்பட்ட "கற்பக விநாயகர் பாடசாலையில்" நேற்று (06) சிறுவர் தினமும் கலை நிகழ்வும் இடம்பெற்றது.

இன்றைய நிகழ்வில் பிரதம அதிதிகளாக அகிலன் பவுண்டேஷன் இலங்கைக்கான உதவிப் பணிப்பாளரும் வோழ்தஸ்ரோ கற்பகவிநாயர் ஆலய இலங்கைக்கான ஸ்தாபகரும் போரதீவுப்பற்று பிரதேசசபையின் முன்னால் தவிசாளர் வீ.ஆர்.மகேந்திரன்
போரதீவுப் பற்று பிரதேச செயல கலாச்சார உத்தியோகத்தர் ஆ. பிரபாகரன் , இளைஞர் சேவை உத்தியோகத்தர் கே.சுந்தரலிங்கம்  விவேகானந்தபுரம் கிராம உத்தியோகஸ்தர் மா.சத்தியயோதி     சமுர்த்தி உத்தியோகஸ்தர் க.கேசவப்போடி  கலாச்சார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் வி.உதயமலர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஆ.பி.நந்தகுமாரி மற்றும் ஆலய  நிருவாகத்தினர் கலந்து  கொண்டனர்.


இவ் நிகழ்வானது  வெல்லாவெளி விவேகானந்தபுரம் கற்பக விநாயகர் அறநெறிப்  பாடசாலை  ஆசிரியர்களாலும் விவேகானந்தபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினராலும் ஒழுங்கு செய்யப்பட்டு  அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும்  விளையாட்டுக்களும் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து  பாடசாலை மாணவர்களுக்கு பரிசீல்களும் கொப்பிகளும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.