விவசாயத்திற்கான எரிபொருள் விநியோகத்தை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் !

விவசாயத்திற்கான எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கான இணைப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புகளுக்காக மேலதிக செயலாளர் ஒருவரின் தலைமையில் 02 உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த செயற்பாடுகளின் மேற்பார்வைக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபத்தின் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஏதேனும் ஒரு பிரதேசத்தில் அறுவடையின் போது அல்லது அறுவடையின் பின்னர் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் மாவட்ட செயலாளர்களை சந்தித்து, அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Published from Blogger Prime Android App