பாடசாலை மாணவர்களுக்கு உண்பதற்கு உணவு இல்லாத நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு !

பாடசாலை மாணவர்களுக்கு உண்பதற்கு உணவு இல்லாத நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் ரெமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு தாங்கள் செயற்பட்டு வருவதாகவும், தற்போது ஒரு பகுதியினருக்கு மதிய உணவை வழங்குவதாகவும், நிதியொன்றை அமைத்து அதனை இரட்டிப்பாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Published from Blogger Prime Android App