ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருந்து ரிஷாத் பதுர்தீன் விடுதலை !

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதுர்தீனை விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (02) உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பானக நீதவானை விசாரணைக்கு மீண்டும் அழைக்கப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தொடர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த சந்தேக நபரை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published from Blogger Prime Android App