இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்க சீனா உறுதி !

நிலவும் சவால்களை வெற்றிகொள்ள இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்க சீனா உறுதியளித்துள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையின் போது தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை தூதுவர் உறுதி செய்தார்.

இலங்கையின் கடன் விவகாரம் தொடர்பான இருதரப்பு மற்றும் பலதரப்பு பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி மற்றும் தூதுவர்கள் மீளாய்வு செய்ததுடன், சீனா தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்களின் தவறான தகவல்களைக் கண்டித்தனர்.Published from Blogger Prime Android App