அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை நீடித்து நீதிமன்றம் !

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை நீடித்து நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

அதன்படி அவருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பொறுப்பு கூற வேண்டும் எனவும் அதன் காரணமாக அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்குமாறு கோரி முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோனினால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published from Blogger Prime Android App