முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து வாக்குமூலத்தை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு !

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து வாக்குமூலத்தை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 9 ம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து 17.8 மில்லியன் ரூபாய் பணத்தை மீட்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாகவே முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து வாக்குமூலத்தை பெறுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் படுக்கையறையில் கண்டெடுக்கப்பட்ட பணம் இலஞ்சமாக பெறப்பட்டதா என்பது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதியின் சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.Published from Blogger Prime Android App