மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் குடும்பத்தாருக்கு நன்கொடை !

கடந்த மே மாதம் இலங்கையில் இடம்பெற்ற பொது அமைதியின்மையின் போது கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரலவுக்காக தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களால் 09 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (14) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறைந்த பாராளுமன்ற உறுப்பினரின் மனைவியிடம் நன்கொடையைக் கையளித்தார்.

பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற ஆளும் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தின் போதே பணக் காசோலையை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வின் போது பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின்படி, மொத்தம் 183 பாராளுமன்ற உறுப்பினர்கள் நன்கொடைக்கு பங்களித்துள்ளனர். மாதிவெல வீடமைப்புத் திட்டத்தில் எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட குடியிருப்பில் வசிக்கும் 20 ஆளும் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய ‘மாதிவெல அமைப்பு’ இதற்கான நிதி சேகரிப்பை ஆரம்பித்தது.

அதன்பின், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மேலும் பல எம்.பி.க்கள் இந்த இயக்கத்தில் இணைந்து பணத்தை வழங்கினர்.Published from Blogger Prime Android App