உள்ளூராட்சி மன்றத்தேர்தலை மார்ச் மாதத்திற்குள் நடத்துவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதி : சஜித் பிரேமதாஸ !

நாட்டின் அரசியலமைப்பில் உள்ள சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமக்கு உறுதியளித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் அடங்களாக மொத்தம் பதினாறு தரப்புகள் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இப்பிரதிநிதிகள் குழுவினர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இவ்வாறு சமூகமளித்தனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துமாறு கோரி கடிதம் ஒன்றையும் அக்குழுவினர் கையளித்தனர்..

இதன்போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய குழுக்கள் அடங்களாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

அரசியலமைப்பிற்கு ஏற்ப குறிப்பிடப்பட்ட காலப்பகுதிக்குள் அதாவது இந்த வருடம் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் அடுத்த வருடம் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுமா? என்பது தொடர்பில் நாம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்டறிந்து கொண்டோம்.

அதற்கமைவாக அரசியலமைப்பிற்கு ஏற்ப குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அதன் மூலம் புதிய உள்ளூராட்சி சபைகள் ஸ்தாபிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் தெளிவாக எமக்கு தெரிவித்தனர்.

குறிப்பாக நாட்டு மக்களின் இறையாண்மை மற்றும் சர்வசன வாக்குரிமையை உறுதிப்படுத்தும் செய்தியை தேர்தல் ஆணைக்குழு எமக்கு வழங்கியுள்ளது என்றார். லைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமக்கு உறுதியளித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.Published from Blogger Prime Android App