பெண் பொலிஸாரின் கழுத்தைப் பிடித்துத் தள்ளிய பொலிஸ் அதிகாரிக்கு விசாரணை !

இரு பெண் பொலிஸாரின் கழுத்தைப் பிடித்துத் தள்ளிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இரு பெண்களால் நேற்று (12) முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரையை பாணந்துறையில் தடுக்கும் நோக்கில், குறித்த இரு பெண்களையும் கைது செய்யுமாறு கூறி அங்கிருந்த இரு ​பெண் பொலிஸாரின் கழுத்தைப் பிடித்துத் தள்ளி மோசமாகச் செயற்பட்ட பொலிஸ் உயர் அதிகாரிக்கு எதிராகவே இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேல்மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவின் பேரில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Published from Blogger Prime Android App