ஜானகி சிறிவர்தனவுக்கு விளக்கமறியல்!

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட திலினி பிரியமாலியின் நிதி விவகாரங்களுடன் தொடர்புடையவர் என கூறப்படும் ஜானகி சிறிவர்தன எதிர்வரும் இம்மாதம் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கோட்டை, கிறிஸ் கட்டிடத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து ஜானகி சிறிவர்தன நேற்று காலை கைது செய்யப்பட்டிருந்தார்.

ஜானகி சிறிவர்தன கிறிஸ் குழுமத்தின் பணிப்பாளர் சபையை பிரதிநிதித்துவப்படுத்துவதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.Published from Blogger Prime Android App