தனிநபர்களுக்கான புதிய வருமான வரி விதிகள் டிசம்பர் மாதம் முதல் அமுல் !

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தனிநபர்களுக்கான புதிய வருமான வரி விதிகள் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. முன்னதாக புதிய வரிச் சட்டங்கள் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்தநிலையில், புதிய சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி அரசியலமைப்பின் 120 மற்றும் 121 ஆவது சரத்துகளின் கீழ் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் மீதான விசாரணையின் போது அட்டர்னி ஜெனரல் வழங்கிய உறுதிமொழி காரணமாகவே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Published from Blogger Prime Android App